குப்பை கிடங்கு அமைக்க இடம் தேர்வு: மண்டல இயக்குனரிடம் சேர்மன் கோரிக்கை

குப்பை கிடங்கு அமைக்க இடம் தேர்வு: மண்டல இயக்குனரிடம் சேர்மன் கோரிக்கை
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா, சேர்மன் விஜய்கண்ணன், கமிஷனர் சசிகலா, பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்றனர்.

குமாரபாளையத்த்தில் குப்பை கிடங்கு, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து கொடுக்க மண்டல இயக்குனரிடம் சேர்மன் கோரிக்கை விடுத்தார்.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நகராட்சி மண்டல இயக்குனர் சுல்தானாவிற்கு விஜய்கண்ணன் சால்வை வழங்கி வாழ்த்து தெரிவிக்க, மண்டல இயக்குனரும் சேர்மனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து சேர்மன் விஜய்கண்ணன் கூறுகையில், குமாரபாளையம் நகரில் குப்பை கொட்ட இடம் தேவை. நாள் ஒன்றுக்கு 17 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வாரச்சந்தை, மணிமேகலை தெரு ஆகிய 2 இடங்களில் 11 டன் குப்பைகள் உரங்களாக மாற்ற பிரித்து அனுப்பப்படுகிறது.

மேலும் நகராட்சி பகுதியில் ஹெல்த் சென்டர் அமைக்க அரசு சார்பில் நிதி மற்றும் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இவை இரண்டுக்கும் இடம் இல்லாத நிலை உள்ளது. குப்பை கிடங்கு,ஹெல்த் சென்டர் அமைக்க இடம் தேர்வு செய்து கொடுக்க வேண்டி, நகராட்சி மண்டல இயக்குனரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் நகர வளர்ச்சி குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

நகராட்சி கமிஷனர் சசிகலா, பொறியாளர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் அழகேசன், சியாமளா, வேல்முருகன், வள்ளியம்மாள், கனகலட்சுமி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!