குமாரபாளையத்தில் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு மவுன ஊர்வலம்

குமாரபாளையத்தில் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு மவுன ஊர்வலம்
X

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம், மலரஞ்சலி நிகழ்வு நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு அனைத்து கட்சிகள் சார்பில் மவுன ஊர்வலம், மலரஞ்சலி நிகழ்வு நடந்தது.

சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு மவுன ஊர்வலம், மலரஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம், மலரஞ்சலி நிகழ்வு நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலர் சீத்தாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம் ஆனங்கூர் பிரிவில் தொடங்கியது. சி.பி.எம். நகர செயலர் சக்திவேல் தலைமை வகித்தார். சேலம் சாலை வழியாக மவுன பேரணி நகராட்சி அலுவலகம் அருகே, காந்தி சிலை முன்பு நிறைவு பெற்றது. இங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, சீத்தாராம் யெச்சூரியின் திருவுருவப்படத்திற்கு அனைவரும் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, சீத்தாராம் யெச்சூரி பொதுமக்களுக்கு செய்த சாதனைகள் குறித்து அனைவரும் பேசினர்.

இதில் காங்கிரஸ் நகர தலைவர் ஜானகிராமன், சி.பி.ஐ. நகர செயலர் கணேஷ்குமார், தி.க. நகர செயலர் சரவணன், ம.தி.மு.க. நகர செயலர் நீலகண்டன், உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!