தட்டான்குட்டை ஊராட்சி தலைவிக்கு சிறந்த சேவைக்கான விருது

தட்டான்குட்டை ஊராட்சி தலைவிக்கு சிறந்த சேவைக்கான விருது
X

சென்னையில் நடைபெற்ற விழாவில், குமாரபாளையம் அருகே உள்ள தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பாவிற்கு சிறந்த சேவைக்கான விருதினை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் வழங்கினார்.

Panchayat President Award -குமாரபாளையம் அருகே உள்ள தட்டான்குட்டை ஊராட்சி தலைவி சிறந்த சேவைக்கான விருது பெற்றார்.

குமாரபாளையம் அருகே உள்ள ஊராட்சி தலைவி சிறந்த சேவைக்கான விருது பெற்றார்.

Panchayat President Award -குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி தலைவியாக புஷ்பா செயல்பட்டு வருகிறார். இவர் பொதுமக்கள் புகார்களை உடனுக்குடன் பரிசீலித்து பணிகள் செய்து தருதல், ஊராட்சி முழுதும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் செயல்படுத்துதல், கணவரின் தலையீடு இல்லாமல், தானே அனைத்து பணிகளையும் கவனித்தல், அரசு விழாக்களை முறைப்படி நடத்துதல், பல தலைமுறைகளாக மயான வழி இல்லாமல் இருந்த குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு, மாற்று சமுதாய நில உரிமையாளர்களிடம் பேசி, வழித்தடம் பெற்று, அதனை முன்னாள் அமைச்சர் தங்கமணி கையால் திறந்து வைக்க செய்தது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியது என்பது உள்ளிட்ட பல பணிகளை பாராட்டி விருது பெற தேர்வு செய்யப்பட்டார்.

கலையின் குரல் மற்றும் மோகன் பொதுநல அமைப்பின் சார்பில் சென்னையில் மாநிலம் முழுதும் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பாவிற்கு சிறந்த ஊராட்சி மன்ற மக்கள் சேவை மற்றும் சமூக சேவைக்காக, அன்னை தெரசா விருதினை, உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் வழங்கினார். இவரை முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது பற்றி முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து கூறியதாவது:

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி நல்லாம்பாளையம் பகுதியில் ஏரி உள்ளது. இது சிறுக, சிறுக மண் அரிப்பு ஏற்பட்டு இந்த கரைகள் முற்றிலும் சேதமானது. இதனால் மழை நீர் வந்தால் தேங்காமல் வீணாக சென்று விடுகிறது. இதனை புதிதாக கரை கட்டி தண்ணீர் சேமித்து வைக்க இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, ஊராட்சி தலைவி புஷ்பா இதற்கான முயற்சி எடுத்து, 10 லட்சம் அரசு நிதி உதவி பெற்று ஏரியின் கரைகளை புதிதாக அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏரியில் மழை நீர் நின்றால், இப்பகுதி விவசாய கிணறுகளில் நீர் பெருகும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து போர்வெல்களில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலையில் இருக்கும். இதனால் இப்பகுதி விவசாயிகள் தண்ணீர் கவலையில்லாமல் விவசாயம் செய்ய உதவியாக இருக்கும். கால்நடைகளுக்கும் போதுமான குடிநீர் கிடைக்கும்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் மக்கள், யாராவது இறந்தால், அவரை தகனம் செய்ய சடலத்தை கொண்டு செல்ல வழியில்லாமல், சடலத்தை சுமந்தவாறு வாய்க்கால் நீரில் நடந்தும், முள் செடிகளுக்கு மத்தியிலும் கொண்டு செல்லும் நிலை இருந்து வந்தது. மயானம் செல்லும் பாதையில் உள்ள நில உரிமையாளர்கள் மயான வழிக்கு இடம் கொடுக்க முன்வராததே காரணம். 10 ஆண்டுகள் அமைச்சராக தங்கமணி இருந்த போதும் இதற்கு தீர்வு காண முடியவில்லை. தற்போது அந்த வழித்தடத்தின் உரிமையாளர் ஒருவர் இறந்ததால், அவரது மருமகன் பாரிவள்ளல் என்பவரும், இதே வழியில் உள்ள அருவங்காடு ஆறுமுகம் என்பவரும் வழி விட சம்மதம் தெரிவித்தனர். இதனால் இந்த வழித்தடத்தை பொதுமக்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு, விழாவாக நடைபெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவது::

சிறந்த சேவை செய்து விருது பெற்ற தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பாவிற்கு வாழ்த்துகள்.இந்த மயான வழித்தட பிரச்னை தீராத பிரச்னையாக இருந்தது. இதற்கு முயற்சி எடுத்து வெற்றி பெறச் செய்த செல்லமுத்து, அவருடன் பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். இடம் கொடுத்து உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil