புரட்டாசி விரதத்தால் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்..!

புரட்டாசி விரதத்தால் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்..!
X

புரட்டாசி மாதம் என்பதால் குமாரபாளையத்தில் கறிக்கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

குமாரபாளையத்தில் பெரும்பாலான பக்தர்கள் புரட்டாசி விரதமிருந்து வருவதால் இறைச்சிக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான இந்து மக்கள் விரதமிருப்பது வழக்கம். அதனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்றபோதும் குமாரபாளையத்தில் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

குமாரபாளையத்தில் பெரும்பாலான பக்தர்கள் புரட்டாசி விரதமிருந்து வருவதால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் இறைச்சிக்கடைக்காரர்கள் கவலை அடைந்தனர்.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் புரட்டாசி மாதம் என்பதால் பெருமாளுக்காக பக்தர்கள் விரதமிருந்து வருகிறார்கள். இதனால் குமாரபாளையம் பகுதியில் ஆட்டிறைச்சி, கோழி, மீன் கடைகளில் வாங்க ஆளில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

பொதுவாகவே புரட்டாசி மாதங்களில் இறைச்சி விற்பனை குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும் விரதம் மேற்கொள்ளாத பிற மக்கள் இறைச்சி வாங்கி உண்பார்கள். ஆனால் இன்று (நேற்று) விற்பனை டல்லடித்தது.

சாதாரண நாட்களில் எங்களுக்கு வியாபாரம் செய்யமுடியாமல் கூட்டம் அலைமோதும். ஒருவருக்கு முந்திக்கொடுத்தால் இன்னொருவர் கோபித்துக்கொள்வார். அதனால் வரிசைப்படி இறைச்சி வழங்குவது வழக்கம். ஆனால் அதற்கு தலைகீழாக இப்போதைய நிலை உள்ளது.

சில நாட்கள் முன்பு விநாயகர் சதுர்த்தி வந்தது. இதில் ஐந்து நாட்கள் வரை தங்கள் இந்த பகுதியில் விநாயகர் கொலு வைத்து, பக்தர்கள் பெருமளவில் விரதம் இருந்ததால் இறைச்சி வியாபாரம் பாதிக்கப்பட்டது. இப்போது புரட்டாசி பிறந்து பெருமாளுக்கு விரதம் இருக்கத் தொடங்கியதால், இந்த மாதம் முழுதும் போதிய வியாபாரம் இல்லாத நிலை ஏற்படும்.

இதனால் இறைச்சி கடையையே நம்பி வாழும் வியாபாரிகள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகி வருகிறார்கள். மீன்களை அதிக நாட்கள் வைத்திருக்க முடியாது. அவைகளை பத்திரமாக ஒரு மாதம் வரை பாதுகாப்பது என்பது சாத்தியமில்லை. ஆடு, கோழி கூட வைத்திருக்கலாம். அதற்கான முதலீட்டுக்கு வட்டி கட்ட வேண்டும். புரட்டாசி மாதம் முடிந்து வியாபாரம் செய்து பார்த்தால், வட்டிக்கு கூட ஈடாகாது எங்கள் நிலை.

வட்டி சரியாக செலுத்தாவிட்டால், கடன் தருபவர்கள் மீண்டும் பணம் கடனாக தரத் தயங்குவார்கள். புரட்டாசி விரதம் என்பதால் இது போன்ற சிரமங்களை வியாபாரிகள் சந்தித்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil