குமாரபாளையம் அருகே குளம் அமைக்க கையெழுத்து இயக்கம் நடத்திய விவசாயிகள்

குமாரபாளையம் அருகே குளம் அமைக்க கையெழுத்து   இயக்கம் நடத்திய விவசாயிகள்
X

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பா ளையம், வேளாங்காடு பகுதியில் குளம் அமைக்க விவசாயிகள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

குமாரபாளையம் அருகே குளம் அமைக்க விவசாயிகள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

குமாரபாளையம் அருகே குளம் அமைக்க விவசாயிகள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி , வீரப்பம்பாளையம், வேளாங்காடு பகுதியில் வேட்டுவ சமுதாய மக்களுக்கான 4 ஏக்கர் மயான நிலம் உள்ளது. இதில் ஒன்றரை ஏக்கர் நிலம் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. வேட்டுவ சமுதாய மக்கள், மயானத்திற்கு ஒரு பகுதி போக, மீதமுள்ள இடத்தில், தண்ணீர் சேமிக்க குளம் வெட்ட முடிவு செய்து, பணிகள் நடந்து வருகிறது. இதில் ஆக்கிரமிப்பு செய்த நபரை வெளியேற சொல்லி விட்டு, நான்கு ஏக்கர் நிலம் முழுவதும் வேட்டுவ சமுதாய மக்கள் பங்களிப்புடன் கம்பி வேலி அமைக்கப்பட்டது.

இதில் ஆக்கிரமிப்பு செய்த நபர், மற்றொரு சமுதாய மக்களை தூண்டிவிட்டு அங்கு இறந்தவர்களுக்குஅஞ்சலி செலுத்தும் வகையில் நடுகல் வைத்து, வழிபாடு செய்யும் மாலா கோவில் அமைக்க ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதற்கு வேட்டுவ சமுதாயமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் அந்த இடத்தில் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் குளம் அமைக்கவும், இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தட்டான்குட்டை ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் விவசாயிகளால் கையெழுத்து இயக்கம் நடத்தபட்டது. தட்டன்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா பங்கேற்று இதில் கையெழுத்து போட்டு துவக்கி வைத்தார்.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!