ஆடு மேய்த்த மூதாட்டி: தடி, இரும்பு ராடால் அடித்த பெண்கள் தலைமறைவு

ஆடு மேய்த்த மூதாட்டி: தடி, இரும்பு ராடால்  அடித்த  பெண்கள் தலைமறைவு
X

பைல் படம்.

குமாரபாளையம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை தடி, இரும்பு ராடால் தாக்கிய பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் குட்டிகிணத்தூர் பகுதியில் வசிப்பவர் சுந்தரம்மாள், 60, விவசாய கூலி. இவர் செப். 18 ம் தேதி மாலை 03:30 மணியளவில் அங்குள்ள விவசாய நிலம் அருகே ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாப்பாத்தி, 48, சாந்தி, 35, இருவரும் தங்கள் நிலத்தில் ஏன் ஆடுகள் மேய்த்தாய்? என்று கேட்டு, தடி, இரும்பு ராடால் சுந்தரம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சுந்தராம்பாள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையில் இருந்த சுந்தரம்மாளிடம் வாக்குமூலம் பெற்று வழக்குபதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். அடித்ததாக கூறப்படும் பாப்பாத்தி, 48, சாந்தி, 35 இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare