குமாரபாளையம்:கோம்பு பள்ளம் சாக்கடையில் சாயக்கழிவு கலப்பதாக புகார்

குமாரபாளையம் கோம்புபள்ளம் சாக்கடையில், சாயம் கலந்த தண்ணீர் கலந்து வருவது, அப்பகுதியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கொம்பு பள்ளம் என்ற பகுதி அருகே உள்ள சாக்கடை நீரில், சாயக் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கால், பெரிய அளவிலான தொழிற்சாலைகள் எதுவும் இயங்கவில்லை. தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தடை உள்ள சூழலில், வழக்கமாக ஓடும் சாக்கடை நீரின் நிறம் மாறி, சாயக்கழிவு நீர் கலந்தது போல உள்ளதால், அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மக்கள் நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி சாயக்கழிவு நீர், சாக்கடையில் கலக்கப்படுகிறதோ என்று சந்தேகத்தை கிளப்பியுள்ள அப்பகுதியினர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story