குமாரபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் கழிவுநீர் கலக்கக் கூடாது : பொதுப் பணித்துறை கடிதம்

வாய்க்கால், காவிரி ஆற்றில் கழிவுநீர் கலக்கக் கூடாதென உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு பொதுப் பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
குமாரபாளையம் பகுதியில் வாய்க்கால் மற்றும் ஆற்றில் குடியிருப்பு கழிவுநீர், சாயக்கழிவு நீர் கலக்கக்கூடாது என பொதுப்பணித்துறை சார்பில் நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்களுக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுவாமிநாதன் கூறியதாவது: குமாரபாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் வரும் போது விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபடுவார்கள். குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர், வாய்க்காலில் பல இடங்களில் குளம் போல் தேங்கி உள்ளன. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. அத்துடன் கிணற்று நீரும் அசுத்தமாவதால் அதனையும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. ஆற்றிலும் இதே நிலை நீடிக்கிறது. ஆகவே மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால், காவிரி ஆற்றில் எந்த கழிவுநீரும் கலக்காமல் தடுக்க வேண்டுமென குமாரபாளையம் நகராட்சி மற்றும் சுற்றியுள்ள ஊராட்சி நிர்வாகங்களுக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu