குமாரபாளையம் அருகே சாலையில் பெருக்கெடுத்து ஒடும் கழிவுநீர்: மக்கள் அவதி

குமாரபாளையம் அருகே சாலையில் பெருக்கெடுத்து ஒடும் கழிவுநீர்: மக்கள் அவதி
X

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, சானார்பாளையம் பகுதி சாலையில் பெருக்கெடுத்து ஓடிம் சாக்கடை கழிவுநீர்.

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, சானார்பாளையம் பகுதியில் சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை சானார்பாளையம் ஊராட்சி பள்ளி பகுதியில் சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அங்குள்ள பள்ளத்தில் தேங்கியும் நிற்பதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், இப்பகுதி குடியிருப்பு வாசிகள், வியாபார நிறுவனத்தார் இந்த துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதிய உணவைக்கூட சாப்பிட முடியாதபடி துர்நாற்றம் வீசுவதாக அவர்கள் தெரிவித்தனர். இப்பகுதியில் போதிய வடிகால் வசதியை ஏற்படுத்தி தர இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்