ராமர் கோவில் ராமநவமியையொட்டி சீதா திருக்கல்யாணம், திருவீதி உலா

குமாரபாளையம் ராமர் கோவில் ராமநவமியையொட்டி சீதா திருக்கல்யாணம், திருவீதி உலா நடந்தது.

ராமர் கோவில் ராமநவமியையொட்டி

சீதா திருக்கல்யாணம், திருவீதி உலா


குமாரபாளையம் ராமர் கோவில் ராமநவமியையொட்டி

சீதா திருக்கல்யாணம், திருவீதி உலா நடந்தது.

குமாரபாளையம் ராமர் கோவில் ராமநவமியையொட்டி ஏப். 6, முதல் சுவாமிகளுக்கு கட்டளைதாரர்கள் சார்பில் தினசரி சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்து வருகிறது. நேற்று சீதா திருகல்யாணம், சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது. தினமும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பக்தர்களின் பக்தி பஜனை பாடல் நிகழ்ச்சிகள் தினசரி நடந்து வருகிறது. சீதா தேவி திருக்கல்யாண திருவீதி உலாவில், சிறுமியர், பெண்கள் பங்கேற்ற கோலாட்டம் நடந்தது. விட்டலபுரி, பஸ் ஸ்டாண்ட், இடைப்பாடி சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருவீதி உலா நடந்தது. வழியெங்கும் பக்தர்கள், தண்ணீர் ஊற்றி, மலர்கள் தூவி, ராமர், சீதாதேவி சுவாமிகளை வரவேற்று, வணங்கினர்.

படவிளக்கம் :

குமாரபாளையம் ராமர் கோவிலில், ராமர், சீதா தேவி திருக்கல்யாண வைபோகம் நடந்தது.

Next Story