சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு..!

சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு..!
X

குமாரபாளையம் அருகே சர்வீஸ் சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுளளது. 

குமாரபாளையத்தில் சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

குமாரபாளையத்தில் சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில், சேலம் கோவை புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக வாகனங்கள் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளன. கத்தேரி பிரிவு முதல் வட்டமலை சர்வீஸ் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், வாகனங்கள் இந்த பகுதியில் செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. பொதுநல ஆர்வலர்கள் பலமுறை அந்த பகுதி ஆக்கிரமிப்பாளர்களிடம் சொல்லியும் பலனில்லை.

மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்கள் எளிதில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் சாலை பணிகள் நடந்து வரும் பகுதியில், ஒரு பக்கமிருந்து, மறு பக்கத்திற்கு சிறு பாதை இருந்தாலும், அதன் வழியாக டூவீலர் ஓட்டுனர்கள் சென்று கொண்டுள்ளனர். இதனை தவிர்க்க, இது போன்று வேலைக்கு இடையூறாக இருக்கும் வாகனங்களை பறிமுதல் செய்தும், ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் சர்வீஸ் சாலைகள் ஊர் பிரிவுகள் அல்லது முக்கிய சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சர்வீஸ் சாலையினை ஆக்கிரமிப்பு செய்துகொள்வதால் அந்த வழியாக வரும் வாகனங்கள் செல்வதற்கு பெரும் இடையூறாக இருக்கிறது. ஆகவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!