குமாரபாளையத்தில் செப். 12ல் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

குமாரபாளையத்தில் செப். 12ல் கொரோனா தடுப்பூசி   சிறப்பு முகாம்
X
குமாரபாளையத்தில் செப். 12ல் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

குமாரபாளையத்தில் செப். 12ல் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் செப். 12ல் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இதுவரை போலியோ தடுப்பூசி செலுத்திய இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் மையங்கள் செயல்படும்.

இனிவரும் காலங்களில் விமான பயணம், ரயில் பயணம், வெளிநாடு, வெளிமாநிலம், வேலைக்கான நேர்காணல் போன்றவைகளுக்கு செல்வதற்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்திய சான்றிதழ் கட்டாய தேவையாகும்.

தடுப்பூசி இருக்கும் காலங்களில் அதனை பயன்படுத்தி பொதுமக்கள் கொரோனா தொற்று நோயின் மூன்றாம் அலையில் இருந்து தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் தங்கள் ஊர் மக்களையும், தங்கள் நண்பர்களையும், நமது மாநிலத்தையும், நமது நாட்டையும், தொற்று இல்லாத பூமியாக மாற்றுவதற்கு அனைவரும் 100 சதவீத தடுப்பூசி செலுத்தி கொள்ள உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story