குமாரபாளையம் அருகே செங்கமா முனியப்பன் கோவிலில் திருவிழா உற்சவம்

குமாரபாளையம் அருகே செங்கமா முனியப்பன் கோவிலில் திருவிழா உற்சவம்
X

குமாரபாளையம் அருகே உள்ள செங்கமா முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி பல வகையான ஊஞ்சல்கள், ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குமாரபாளையம் அருகே உள்ள செங்கமா முனியப்பன் கோவில் திருவிழா இன்று நடைபெறுகிறதுநடைபெறவுள்ளது.

குமாரபாளையம் அருகே உள்ள செங்கமா முனியப்பன் கோவில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த திருவிழா டிச. 20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. டிச. 30ல் உற்சவ பெரும் பூஜை, மகா அபிஷேகம் நடைபெற்றது. டிச. 31 மாலை காவிரி புனித தீர்த்தம் கொண்டு வருதல், ஜன. 1 ஆங்கிலப் புத்தாண்டு அன்று பொங்கல் திருவிழா உற்சவம் நடைபெறவுள்ளது. ஜன. 2ல் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள். இந்த திருவிழாவிற்கு சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள்.

விழாவையொட்டி, கோவில் அருகே இருக்கும் வாரச்சந்தையில் கரும்பு சந்தை, சிறுவர், சிறுமியர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ பல வகையான ஊஞ்சல்கள், ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் விரும்பி வாங்கும் ரெடிமேடு துணி கடைகள், பெண்களுக்கான பேன்சி கடைகள் என பலதரப்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story