குமாரபாளையத்தில் ஜோதிடர்கள் கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்றம்

குமாரபாளையத்தில் ஜோதிடர்கள் கருத்தரங்கம்   மற்றும் பட்டிமன்றம்
X

குமாரபாளையம் யோகேஷ் ஜோதிட மையம் சார்பில் ஜோதிடர்கள் பட்டிமன்றம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜோதிடர்கள் கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் யோகேஷ் ஜோதிட மையம் சார்பில் ஜோதிடர்கள் கருத்தரங்கம் தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. சவுபாக்கியம், விஜய், முருகேசன், கமலசேகரன், பழனிச்சாமி, ராஜராஜேஸ்வரி, முருகேசன் உள்ளிட்ட பலர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். இதையடுத்து சனிபகவான் அதிகம் தருவது சாதனையா? சோதனையா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடுவர் ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. சாதனையே என்ற அணியில் கமலசேகரன், சவுரிராஜன், ராஜராஜேஸ்வரி, பழனிச்சாமி, சோதனையே என்ற அணியில் முருகேசன், ஈஸ்வரன், கனிமொழி, சக்திதாஸ் வாதாடினர். இதில் சாதனையே என தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை நவமணி, ஆட்டையாம்பட்டி ஈஸ்வரன், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், கோபி ராவ், பூபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்