குமாரபாளையம் பூ மார்க்கெட்டில் கேரி பேக்கில் பூக்கள் விற்க தடை

குமாரபாளையம் பூ மார்க்கெட்டில் கேரி பேக்கில் பூக்கள் விற்க   தடை
X

குமாரபாளையத்தில் கேரி பேக்கில் பூக்கள் விற்பனைக்கு எஸ்.ஒ. தடை விதித்தார்.

குமாரபாளையத்தில் கேரி பேக்கில் பூக்கள் விற்பனைக்கு சுகாதார அதிகாரி தடை விதித்தார்.

குமாரபாளையம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டவிருப்பதால், தற்காலிகமாக பஸ் நிலைய வளாகத்தில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதனால் நகராட்சி அதிகாரிகள் புதிய கட்டுமான பணிகள் பார்வையிடவும், தற்காலிக மார்க்கெட்டில் உள்ள பிரச்சினை குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்கள். நேற்று சுகாதார அலுவலர் ராமமூர்த்தி மார்க்கெட்டில் ஆய்வு செய்த போது, பூக்கள் விற்கும் வியாபாரிகள் கேரி பேக்கில் பூக்களை போட்டு விற்பனைக்கு வைத்திருந்தனர். அவர்களிடம் எஸ்.ஒ. எச்சரித்து கூறியதாவது:

கேரி பேக்குகள் முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என ஒவ்வொரு கூட்டத்திலும் மேலதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள். பலமுறை கூறியும் நீங்கள் கேட்பதாக இல்லை. கேரிபேக்குகள் அகற்றி பூக்களை வியாபாரம் செய்யுங்கள். கேரி பேக்குகள் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!