குமாரபாளையம் காளியம்மன் கோவில் விழாவில் இரண்டாவது நாள் தேரோட்டம்
குமாரபாளையத்தில் காளியம்மன் திருக்கல்யாணம், மற்றும் தேர்த்திருவிழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன் மகா குண்டம் மற்றும் தேர்த்திருவிழா பிப். 13 பூச்சட்டுதலுடன் துவங்கியது. மறு பூச்சாட்டு, கொடியேற்றம், தேர்க்கலசம் வைத்தல், சக்தி அழைத்தல், மகா குண்டம் இறங்குதல் உள்ளிட்ட வைபவங்கள் நடந்தன. நேற்று காலை காளியம்மனுக்கு திருக்கல்யாண வைபோகம் நடந்தது. இதில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
காலை 10:00 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ராஜா வீதி, சேலம் சாலை, தம்மண்ணன் வீதி, வழியாக வந்து புத்தர் வீதியில் நிறைவு பெற்றது. இன்று மீண்டும் இரண்டாம் நாள் தேரோட்டமாக இந்த இடத்திலிருந்து துவங்கி கோவில் வளாகத்தில் நிலை சேரும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனை வேண்டிக்கொண்டு, தேர் மீது வாழைப்பழங்கள், காசுகள் வீசினர். வழியெங்கும் சாலையை பக்தர்கள் தண்ணீர் ஊற்றி தூய்மை படுத்தியும், வண்ண, வண்ண கோலங்கள் போட்டும், மலர்கள் தூவியும் அம்மனை வரவேற்றனர். இரண்டாம் நாள் தேரோட்டம் நிறைவு பெற்றதும் வான வேடிக்கை நடைபெறும். அடுத்தநாள் மஞ்சள் நீர் திருவீதி உலா நடைபெறும்.
நகரில் பல்வேறு இடங்களில் இன்னிசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, பட்டிமன்றங்கள், பாட்டு மன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
காளியம்மன் கோவில் தேர் திருவிழாவில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu