குமாரபாளையத்தில் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அனுப்பி வைப்பு

குமாரபாளையத்தில் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அனுப்பி வைப்பு
X

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நகரமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தமிழக உள்ளாட்சி தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது முதல் வேட்புமனு தாக்கல், பரிசீலனை, திரும்ப பெறுதல், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி, பூத் சிலிப் வழங்கும் பணி ஆகியன நடைபெற்றன.

இதையடுத்து, 73 ஓட்டுச்சாவடி மையங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி, சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இரு ஓட்டுச்சாவடிகளில் இருந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின. பழுது நீக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பின் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 73 ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!