மழை நீரில் மிதந்த பள்ளிபாளையம் சாலைகள்: கலெக்டர் நேரில் ஆய்வு

மழை நீரில் மிதந்த பள்ளிபாளையம் சாலைகள்: கலெக்டர் நேரில் ஆய்வு
X

நீரில் சிக்கியவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்லும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்.

கனமழை காரணமாக நீரில் மிதந்த பள்ளிபாளையத்தை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பருவ மழைக்காலம் நடந்து வரும் வேளையில் நாமக்கல். சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பழ மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் பெய்த கனமழையால், சாலையில் மழை நீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. காவிரி பாலம், பஸ் ஸ்டாண்ட், ஓட்ட மெத்தை, திருச்செங்கோடு சாலை, உள்ளிட்ட பகுதிகள் மழைநீரில் மிதந்தன.

சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து செல்லும் நிலை உருவானது. தாழ்வான இடங்களில் சிக்கிகொண்ட பொதுமக்களை மேடான பகுதிகளுக்கு வெப்படை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அங்கு விரைந்து தண்ணீரில் மிதக்கும் சாலைகளை நேரில் பார்வையிட்டார்.

Tags

Next Story