கனமழை காரணமாக ஊருக்குள் புகுந்த ஏரி உபரி நீர்
பள்ளியை சூழ்ந்த வெள்ளநீர்
குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் ஏரி நேற்றுமுன்தினம் பெய்த மழையில் நிரம்பி உபரி நீர் கம்பன் நகர், பெரியார் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முருங்கைக்காடு, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் வீடுகளில் புகுந்தது.
பெண்கள் பள்ளியில் நீர் புகுந்து வளாகம் முழுதும் நீரால் நிறைந்ததால் பள்ளிக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. 45க்கும் மேலான வீடுகளுக்குள் புகுந்த நீர் நகராட்சி லாரி மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்டது.
கோம்பு பள்ளத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடியதில் தம்மண்ணன் சாலை முன்னாள் சேர்மன் தனசேகரன் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் தண்ணீர் புகுந்து, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான ஜவுளிகள் சேதமாகின.
தி.மு.க. அலுவலகம் அருகே உள்ள சிறிய பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து பாலத்தின் மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாசுகி நகர் ஒன்றிய பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. பள்ளி குழந்தைகள் யாரும் அப்போது இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu