குமாரபாளையம் நகராட்சி புதிய கமிஷனராக சசிகலா பொறுப்பேற்பு

குமாரபாளையம் நகராட்சி புதிய கமிஷனராக சசிகலா பொறுப்பேற்பு
X

குமாரபாளையம் நகராட்சியின் புதிய கமிஷனர் சசிகலா.

குமாரபாளையம் நகராட்சியின் புதிய கமிஷனராக சசிகலா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு பணியில் சேர்ந்து 23 மாதங்கள் ஆன நிலையில், தற்போது பதவி உயர்வு பெற்று வாணியம்பாடி நகராட்சி கமிஷனராக மாறுதல் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம், பேரணம்பட்டு நகராட்சி கமிஷனர் சசிகலா குமாரபாளையம் நகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.

இவர் நேற்று காலை 11 மணியளவில் குமாரபாளையம் நகராட்சி புதிய கமிஷனராக தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய கமிஷனர் சசிகலாவிற்கு பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ.க்கள் செல்வராஜ், சவுந்திரராஜன், ஆர்.ஐ. கோபால், உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், டி.பி.சி. பணியாளர்கள் எனப்படும் மலேரியா, டெங்கு பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம், முன்னாள் நகர செயலர் வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் ராமசாமி, முன்னாள் நகரமன்ற தலைவர் புதல்வர் கதிரேசன், நிர்வாகிகள் அன்பழகன்,ரவி, ராஜ்குமார், உள்பட பலர் புதிய கமிஷனரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!