சர்வதேச அளவிலான யோகா போட்டியில் குமாரபாளையம் பயிற்சியாளர் மற்றும் மாணவி சாதனை

சர்வதேச அளவிலான யோகா போட்டியில் குமாரபாளையம் பயிற்சியாளர் மற்றும் மாணவி சாதனை
X

பாண்டிச்சேரியில் நடைபெற்ற 27வது சர்வேதேச யோகா போட்டியில் தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு சார்பில் பொது செயலர் அரவிந்தன், மாணவி மாலினி, மாணவன் விக்னேஷ் ஆகியோருக்கு முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கி பாராட்டினார். 

சர்வதேச அளவிலான யோகா போட்டியில் குமாரபாளையம் பயிற்சியாளர் மற்றும் மாணவி சாதனை படைத்துள்ளனர்.

சர்வதேச அளவிலான யோகா போட்டியில் குமாரபாளையம் பயிற்சியாளர் மற்றும் மாணவி சாதனை படைத்துள்ளனர்.

பாண்டிச்சேரியில் 27வது சர்வேதேச யோகா போட்டிகள், 2022 நடைபெற்றது. ஆண்டுதோறும் ஜனவரி 4, 5, 6, 7 ஆகிய நாட்களில் நடைபெறுவது வழக்கம். பாண்டிச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் இந்த போட்டிகள் நடத்தபடுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாட்டினர் இந்த யோகா போட்டியில் கலந்து கொள்வார்கள்.

ஒவ்வொரு வயது பிரிவின் கீழ் மூன்று பரிசுகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு சார்பில் பொது செயலர் அரவிந்தன் பங்கேற்று, யோகா சாகசங்களை நிகழ்த்தி காட்டினார். இவரது மாணவி மாலினி, 21 வயது பிரிவில் முதல் பரிசு பெற்று தங்கபதக்கம் வென்றார்.

மாணவர் விக்னேஸ், 26 வயது பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றார். பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, பயிற்சியாளர் அரவிந்த், பரிசுகள் வென்ற மாலினி, விக்னேஷ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil