ஆண்களுக்கான கபடிப் போட்டியில் சங்ககிரி அணி முதலிடம் பெற்று சாதனை

ஆண்களுக்கான  கபடிப் போட்டியில் சங்ககிரி அணி முதலிடம் பெற்று சாதனை
X

குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி நண்பர்கள் குழுவின் சார்பில் ஆண்கள் கபாடி போட்டி நடைபெற்றது.

குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஆண்கள் கபடி போட்டியில் சங்ககிரி அணியினர் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.

குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் மாசித்திருவிழாவையொட்டி நண்பர்கள் குழுவின் சார்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் கபாடி போட்டி நடைபெற்றது. தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். பல்வேறு ஊர்களிலிருந்து 40 அணியினர் பங்கேற்றனர்.

இதில் முதல் பரிசு சாமி அகாடமி, சங்ககிரி அணியினரும், 2ம் பரிசு குமாரபாளையம் சேட்டு டீ ஸ்டால் அணியினரும், 3ம் பரிசு குமாரபாளையம் இளங்கோ அணியினரும், 4ம் பரிசு ஏ.கே.சி. பள்ளிபாளையம் அணியினரும் பெற்றனர்.

வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இதில் சங்க துணை தலைவர் சின்னுசாமி, செயலர் தங்கவேலு, துணை செயலர் பச்சமுத்து, பொருளர் சரவணகுமார், ஆலோசகர் மகாலிங்கம், நிர்வாகி ஹரிஹரன் உள்பட பலரும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story
future of ai act