குமாரபாளையத்தில் மணல் அலுவலக மேலாளர் மாயம்: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் மணல் அலுவலக மேலாளர் மாயம்: போலீசார் விசாரணை
X

குப்பன், குமாரபாளையம்.

குமாரபாளையத்தில் மணல் அலுவலக மேலாளர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையம் ராஜராஜன் நகரில் வசிப்பவர் குப்பன், 45. மணல் அலுவலக மேலாளர். இவருக்கு பிரேமா, 40, என்ற மனைவி, திவ்யா என்ற மகள், ரவிச்சந்திரன், குரு என்ற மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் பழனிக்கு பாத யாத்திரை சென்று நேற்று இரவு 08:30 மணிக்கு கத்தேரி பிரிவு வந்து சேர்ந்த அவரது மனைவி பிரேமா, அதே பகுதியில் பணியாற்றும் தன் கணவருக்கு போன் செய்துள்ளார்.

ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்துள்ளது. மகன் ரவிச்சந்திரனுக்கு போன் செய்து வரச் சொல்லி வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை கணவர் பணியாற்றிய அலுவலகத்தில் விசாரித்தபோது, முதல் நாள் இரவே வேலை முடிந்து சென்று விட்டதாக அதன் உரிமையாளர் கூறியதாக தெரிகிறது.

இது தொடர்பாக தனது கணவரை கண்டுபிடித்து தர வேண்டி பிரேமா, குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இதன்படி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!