குமாரபாளையம் அருகே கோவில் விழாவில் சமபந்தி விருந்து

குமாரபாளையம் அருகே கோவில் விழாவில் சமபந்தி விருந்து
X

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பெரிய காப்ரா மலை அப்புச்சிமார், மசிரி ஆத்தாள் கோவிலில் பொதுமக்களுக்கு அசைவ சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

குமாரபாளையம் அருகே கோவில் விழாவில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பெரிய காப்ரா மலை உள்ளது. ஆண்டு தோறும் ஆடி மாதம் கடைசி ஞாயிறு இங்குள்ள அப்புசிமார், மசிரி ஆத்தாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, ஆடுகள், கோழிகள் பலியிட்டு பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து வழங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு நேற்று இந்த விழா நடைபெற்றது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. 30க்கும் மேற்பட்ட ஆடுகள், 100க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டு பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. பல பகுதியில் இருந்து பக்தர்கள் பெருமளவில் திரண்டு இந்த விழாவில் பங்கேற்றனர்.

Tags

Next Story