கெட்டுபோன இறைச்சி விற்பனை: எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்

கெட்டுபோன இறைச்சி விற்பனை: எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்
X
குமாரபாளையத்தில் கெட்டுபோன இறைச்சி விற்பனைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் நேற்று இரவு சிலர் சிக்கன் சாப்பிட சென்றுள்ளனர்.

அது சாப்பிட முடியாத நிலையில் துர்நாற்றம் வீசவே,இது பற்றி கடை பணியாளர்களிடம் கேட்க, அவர்கள் மொழி தெரியாமல் எதையும் கண்டுகொள்ளாமல் வேலை செய்து கொண்டிருந்தனர்.

இது பற்றி நகர தி.மு.க. துணை செயலர் ரவியிடம் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு வந்த ரவி சோதனை செய்ததில் 30,40 கிலோவிற்கும் அதிகமாக பழைய சிக்கன் குளிர்சாதன பெட்டியில் இருந்ததை கண்டு பிடித்துள்ளார்.

இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது போன்று நகரில் உள்ள அனைத்து சில்லி சிக்கன் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்