குமாரபாளையத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க மண் பரிசோதனை துவக்கம்

குமாரபாளையத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க மண் பரிசோதனை துவக்கம்
X

குமாரபாளையத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க, தம்மண்ணன் சாலை, அப்பன் மேடு அருகே, மண் பரிசோதனை பணி துவங்கியுள்ளது. 

குமாரபாளையத்தில், உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக, மண் பரிசோதனை துவங்கியுள்ளது.

குமாரபாளையம், தம்மண்ணன் வீதியில், நகரின் கழிவுநீர் செல்லும் பெரிய வடிகாலான கோம்பு பள்ளம் செல்கிறது. இந்த வீதியில் அப்பன் மேடு என்ற இடத்தில், சாலையை கடக்கும் இடத்தில் தரைமட்ட பாலம் உள்ளது. சிறிய மழை வந்தாலும் அதிக தண்ணீர் இந்த பள்ளத்தில் செல்வதால், பாலத்தின் மீது தண்ணீர் செல்லும் நிலை ஏற்படுகிறது.

மேலும் அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், இந்த இடத்தில் தூய்மை பணி மேற்கொண்டு, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று, நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து குமாரபாளையம் பகுதி பொதுமக்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி சார்பில், இந்த இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டி, நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், சம்மந்தப்பட்ட இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அப்பகுதியில், மண் பரிசோதனை செய்யும் பணி நேற்று துவங்கியது. இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai business to start