சாயப்பட்டறை, ஜவுளி உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு தடுப்பூசி

சாயப்பட்டறை, ஜவுளி உற்பத்தியாளர்   சங்க உறுப்பினர்களுக்கு தடுப்பூசி
X

குமாரபாளையம் சாயப்பட்டறை, ஜவுளி உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு சங்க அலுவலகத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் சாயப்பட்டறை, ஜவுளி உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் கொரோனா தடுப்பூசி ஜி.ஹெச், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள் உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.


இதே போல் அதிக நபர்கள் உள்ள தொழிற்சாலைகள், சங்கங்கள் ஆகியவற்றில் தனி முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று குமாரபாளையம் சாயப்பட்டறை, ஜவுளி உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு சங்க அலுவலகத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் முதற்கட்டமாக 115 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இரண்டு சங்கங்களின் தலைவர் பிரபாகரன் தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது.

Tags

Next Story