தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆர்.டி.ஒ.

தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆர்.டி.ஒ.
X

தனியார் பள்ளி வாகனங்களை ஆர் டி ஓ ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் அருகே தனியார் பள்ளி வாகனங்களை ஆர்.டி.ஒ. ஆய்வு செய்தார்.

நவ. 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்க தமிழக அரசு உத்திரவிட்டதால், தனியார் பள்ளி வாகனங்கள் சரியாக உள்ளதா? என்பது குறித்து திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் ஆய்வு நடத்தப்பட்டது.

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளை சேர்ந்த தனியார் பள்ளிகளை சேர்ந்த 83 வாகனங்களை திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. இளவரசி ஆய்வு செய்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கிரேடு ஏ.1 சத்யா, பிரபாகரன், திருச்செங்கோடு போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன் உடனிருந்தனர்.

இவைகளில் சிறிய குறைபாடுகள் உள்ள 10 வாகனங்களை இயக்க தடை விதித்து, அவைகளை சரி செய்து, அதிகாரிகள் பார்வையிட்ட பின்னர் இயக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதர வாகனங்கள் 73 வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

Tags

Next Story