குமாரபாளையத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்பு ஆக்சிஜன் செறிவூட்டி எம்.எல்.ஏ., வழங்கல்

குமாரபாளையத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்பு ஆக்சிஜன் செறிவூட்டி எம்.எல்.ஏ., வழங்கல்
X

சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டர் சுதாக்கொடியிடம் ஆக்சிஜன் செறிவூட்டியை வழங்கிய முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தங்கமணி.

குமாரபாளையத்தில் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டியை எம்.எல்.ஏ., தங்கமணி வழங்கினார்.

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அவசியம் என்பதால், குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் நிகழ்வு நகர அ.தி.மு.க. செயலர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பங்கேற்று, டாக்டர் சுதாக்கொடியிடம் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டியை வழங்கினார்.

நகரில் நடைபெற்று வரும் வடிகால், தார்சாலை, உள்ளிட்ட பணிகளை எம்.எல்.ஏ. தங்கமணி ஆய்வு செய்தார். எம்.எல்.ஏ. அலுவலகம் சென்று அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். கல்வி உதவித்தொகை, மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.

நிர்வாகிகள் நகர துணை செயலர் திருநாவுக்கரசு, பழனிசாமி, தனசேகரன், சேகர், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!