குமாரபாளையத்தில் பூட்டை உடைத்து ரூ.32 லட்சம், 60 பவுன் நகைகள் திருட்டு

குமாரபாளையத்தில் பூட்டை உடைத்து ரூ.32 லட்சம்,   60 பவுன் நகைகள் திருட்டு
X

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு பகுதியில் திருட்டு சம்பவம் நடைபெற்ற வீடு.

குமாரபாளையத்தில் பூட்டை உடைத்து 32 லட்சம் ரூபாய், 60 பவுன் நகை மர்ம நபர்கள் திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வேமன்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் விமல், 40. விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர். இவரது உறவினர் இறந்ததால், இவரது மனைவி, இரு பெண் குழந்தைகள் அனைவரும் நேற்றுமுன்தினம் இரவு 08:00 மணியளவில் ஓலப்பாளையம் சென்று விட்டனர்.

நேற்று அதிகாலை 02:00 மணியளவில் விமல் மட்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கிரில் கேட் பூட்டு, வீட்டு கதவின் பூட்டு ஆகியவை உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 32 லட்சம் ரூபாய் ரொக்கம், 60 பவுன் தங்க நகை ஆகிய திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தர, அதிகாலை 02:30 மணிக்கு டி.எஸ்.பி. சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.-க்கள் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமரா, மோப்ப நாய், உதவியுடனும், கைரேகை நிபுணர்களின் தடயங்கள் சேகரிப்பாலும் பணம் மற்றும் நகைகளை திருடி சென்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த இடத்தின் அருகில் வசிப்பவர் ஜெயராமன், 65. தைப்பொங்கல் திருவிழாவிற்கு ஹைதராபாத்தில் உள்ள தன் மகனின் வீட்டிற்கு தன் மனைவியுடன் சென்று விட்டார். நேற்றுமுன்தினம் இரவு இவரது வீட்டின் கதவினை உடைத்து, பூட்டை அகற்றி உள்ள சென்று, பீரோவின் பூட்டை உடைத்து பணம், நகை உள்ளதா? என தேடி பார்த்துள்ளனர். ஒன்றும் இல்லாததால் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்தும் குமாரபாளையம் போலீசார் விசாரணை வருகிறார்கள்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil