குமாரபாளையத்தில் ரோட்டரி சங்க கண்கவர் பசுமை பட்டாசு திருவிழா

குமாரபாளையம் ரோட்டரி சங்க பட்டாசு கடையில் ஆர்வத்துடன் பட்டாசு வாங்கும் பொதுமக்கள்.
குமாரபாளையத்தில் ரோட்டரி சங்கம், பசுமை பட்டாசு தரச்சான்றிதழ் பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா பிராண்ட் பட்டாசு கம்பெனியின் நேரடி விற்பனையில் கண்கவர் பட்டாசு திருவிழா பள்ளிபாளையம் பிரிவு சாலை, வேளாங்காட்டார் காம்ப்ளெக்ஸ்- பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழா தீபாவளி நாள் வரை நடைபெறவுள்ளது. சுய சேவை முறையில் பட்டாசுகளைத் தேர்வு செய்து கொள்ளலாம். இங்கு வாங்கப்படும் பட்டாசுகளுக்கு 20 சதவீத அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 5,000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கும் முதல் 100 பேருக்கு பேக்கிங் பக்கெட் இலவசம். ரோட்டரி சங்க பட்டாசு கடையில் பொதுமக்கள் ஆர்வமுடன் பட்டாசு வாங்கி வருகின்றனர்.
இதுகுறித்து சங்கத் தலைவர் செந்தில்குமார் கூறுகையில், ரோட்டரி சங்கம் சார்பில் பல்வேறு சேவைப்பணிகள் செய்து வருகிறோம். இந்த சேவைப் பணிகள் தொடர்ந்து செய்திட இந்த பட்டாசுக் கடை வருமானம் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் முழுதும் முழுக்க முழுக்க சேவைத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தவிருப்பதால் பொதுமக்கள் தாங்களும் சேவைப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள எங்களது ரோட்டரி சங்க பட்டாசுக் கடையில் பட்டாசு வாங்கி உதவ வேண்டுகிறோம். இங்கு நியாயமான விலையில் விற்பனை செய்து வருகிறோம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu