கயிற்றுக் கட்டில் விற்பனை ஜோர்..!

கயிற்றுக் கட்டில் விற்பனை ஜோர்..!
X

கட்டிலுக்கு கயிறு போடும் விற்பனையாளர்.

குமாரபாளையத்தில் கயிற்றுக் கட்டில் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் பகுதியில் கயிற்றுக் கட்டில் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

கிராமப்புறப் பகுதிகளில் விவசாயிகள் பெரும்பாலோர் விவசாயப்பணிகளை முடித்து விட்டு, வீட்டின் முன்பு, காற்றோட்டமாக கயிற்று கட்டில் போட்டு ஓய்வெடுப்பது வழக்கம்.

ஸ்டீல் கட்டில் வந்தது முதல் இந்த கயிற்று கட்டில் விற்பனை சற்று குறைந்தது. இது பற்றி கயிற்றுக் கட்டில் வியாபாரி முருகேசன் கூறுகையில், ஸ்டீல் கட்டில் ஒருவரால் தூக்க முடியாது. ஒருவரே எங்கு வேண்டுமானாலும் தூக்கி செல்லும் வசதி கயிற்றுக்கட்டிலுக்குத்தான் உண்டு.

ஸ்டீல் கட்டில் விட, கயிற்று கட்டில் விலையில் குறைவு. ஆனால், நிம்மதியான தூக்கத்திற்கு ஏற்றது. முன்பெல்லாம் கிராமப்புற பகுதியில் திருமண சீதனமாக கயிற்றுக் கட்டிலை வழங்கும் பழக்கமும் இருந்து வந்தது. இப்போதும் பெரும்பாலான இடங்களில் இந்த வழக்கம் உண்டு.


இந்த கட்டில் 750, 850, 950, ஆயிரத்து 200 என பல விலைகளில் விற்கப்படுகிறது. இது வாணி, வேழம் ஆகிய மரங்களில் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு தேவைப்படும் கயிறு வகைகள் கொங்கணாபுரம், வெள்ளையம்பாளையம் ஆகிய பகுதிகளில் கிடைக்கிறது.

ஒரு கட்டிலுக்கு சிறிய அளவிலான கயிறு 10 கட்டுகளும், பெரிய அளவிலான கயிறு 7 கட்டுகளும் தேவைப்படும். ஒரு கட்டு 25.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது பெல்ட் கட்டில், பிரேம் கட்டில் என பல வகைகள் வந்து விட்டது. இருப்பினும் பாரம்பரியத்தை காக்கும் கட்டில் கயிற்றுக்கட்டில் மட்டுமே, என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!