பள்ளிபாளையத்தில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை

பள்ளிபாளையத்தில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை
X
பள்ளிபாளையத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.

பள்ளிபாளையம் டி.வி.எஸ். மேடு பகுதியில் வசிப்பவர் ஜோஜித்பாரிக், 21. மேற்கு வங்கம் மித்தான்பூரை சேர்ந்தவர். இவர் தனியார் ஆட்டோமேட்டிக் பவர்லூம் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் சொந்த ஊரிலிருந்து சம்பா ஜானா, 18, என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டு பள்ளிபாளையம் அழைத்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தம்பதியர் இருவரும் தங்கியிருந்த வீடு நேற்று காலை வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியும் திறக்கவில்லை.

பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தந்தனர். நேரில் வந்த போலீசார் கதவை உடைத்து சென்று பார்த்த போது, இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில், பெண்ணின் பெற்றோர் இவர்கள் இருக்கும் இடம் அறிந்து, நேரில் வந்து பிரித்து விடுவார்கள் என அஞ்சி, தற்கொலை செய்து கொண்டனர், என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
ai marketing future