குமாரபாளையம் அருகே கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணிகள்: வாகன ஓட்டிகள் அவதி

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய் ஹிந்த் நகர் பகுதிகளில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய் ஹிந்த் நகர் பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க 40 நாட்களுக்கு முன் சாலையில் ஜல்லிகள் கொட்டப்பட்டன. அதிக குடியிருப்புகள் உள்ள பகுதி என்பதால், அடிக்கடி டூவீலர்கள் அதிகம் இவ்வழியே சென்று வருவதுண்டு.
வேலைக்கு செல்வோர் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், அவசரமாக மருத்துவமனைக்கு செல்வோர் என பல தரப்பினர் டூ வீலரில் செல்கையில் இந்த ஜல்லி கற்களால் வாகன சேதம், டயர் சேதம், பஞ்சர் ஆகும் நிலை ஆகியவற்றால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த ஜல்லியால் பொதுமக்கள் தாங்கள் போகும் இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு போக முடியாத நிலை ஏற்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்ட நிலையில் போதிய வருமானம் இல்லாமல் வாகன செலவால் தவித்து வருகிறார்கள்.
அங்கொரு வேலை, இங்கொரு வேலை என சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் பணிகளை பெற்றுக்கொண்டு இது போன்று பணியை முடிக்காமல் மிகவும் கால தாமதம் செய்து பொதுமக்களை சிரமப்படுத்தி வருகிறார்கள்.
இது போன்ற ஒப்பந்ததாரர் மீது மாவட்ட நிர்வாகத்தினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புதிய தார் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu