குமாரபாளையத்தில் தொடர் மழையால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி

குமாரபாளையத்தில் தொடர் மழையால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி
X

குமாரபாளையத்தில் தொடர் மழையால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குமாரபாளையத்தில் தொடர் மழையால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் சாலை, இடைப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் இட்லி, சில்லி, பாணி பூரி, மொபைல் போன் உதிரி பாகங்கள், துணிக்கடை, செருப்பு தைக்கும் கடை, கிழிந்த துணிகள் தைக்கும் கடை, நடமாடும் டீ கடை, தேங்காய் பால் கடை, அருகம்புல் சாறு கடை, டெம்போவில் விற்கப்படும் பழக்கடை, வெங்காயம், காய்கறி கடைகள், உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் செயல்பட்டு வருகிறது.

இதனை நம்பி பல ஆயிரம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். இரவு 07:00 மணி முதல் இரவு 09:00 மணி வரைதான் இவர்களுக்கு வியாபார நேரம். பல நாட்களாக மாலை 06:00 மணிக்கு மேல் தொடங்கும் மழை ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது. இதனால் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!