குமாரபாளையம்: சாலையோரத்திலே குழி - வாகன ஓட்டிகள் கிலி

குமாரபாளையம்: சாலையோரத்திலே குழி - வாகன ஓட்டிகள் கிலி
X

சேலம் - கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் உள்ள பெரியபள்ளம்.

குமாரபாளையம், கத்தேரி பிரிவு பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் அபாயகரமான பள்ளத்தை மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், சேலம் - கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில், பெரியபள்ளம் ஒன்று, விபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இவ்வழியே வேமன்காட்டுவலசு , தட்டான்குட்டை, சத்யா நகர், எதிர்மேடு, கல்லங்காட்டு வலசு உள்ளிட்ட பகுதிகளுக்கும், இந்த பகுதிகளில் இருந்து குமாரபாளையம் செல்லும் அனைவரும், இந்த வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

அதிக தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ள பகுதியில், இந்த பள்ளதால் அனைவருக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் இந்த பள்ளம் சரிவர தெரியாததால், பலரும் இதில் விழுந்து காயமடைந்து வருகிறார்கள். பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பள்ளத்தை, உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture