சாலை பாதுகாப்பு பணிக்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு
குமாரபாளையம் சேலம் சாலையில் எல்.ஈ.டி. விளக்குகள் அமைக்க டிரில்லிங் மெசின் கொண்டு பள்ளம் தோண்டும் பணி துவக்கம்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது:
குமாரபாளையம் நகராட்சி சாலை பாதுகாப்பு பணிக்காக ரூ. 2 கோடி நிதி மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாரச்சந்தை முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையிலான சாலை, ஐயன் தோட்டம் சாலை, அம்மா உணவகம் சாலை ஆகிய 3 சாலைகளும், புதிய தார் சாலையாக மாற்றப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் பெறப்பட்டு, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் எல்.ஈ.டி. விளக்குகள், டிவைடர்கள் இடையில் நிறுவப்பட்டு ஒரு கம்பதிற்கு 2 எல்.ஈ.டி. விளக்குகளும், சில இடங்களில் ஒரு கம்பத்திற்கு ஒரு எல்.ஈ.டி. விளக்கும் ஆக 129 விளக்குகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. மேலும் குமாரபாளையம் ராஜம் தியேட்டர் முதல் பள்ளிபாளையம் பிரிவு வரையில் சேலம் சாலையில் எல்.ஈ.டி. விளக்குகள் அமைக்க டிரில்லிங் மெசின் கொண்டு பள்ளம் தோண்டும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu