குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமாரபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விபத்தில்லா தமிழ்நாடு எங்கள் பொறுப்பு எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் திருகுணா தலைமை வகித்தார். ஓட்டுனர் உரிமத்தின் அவசியம், சாலையில் அமைக்கப்படும் முன்னெச்சரிக்கை பலகைகள், சாலை குறியீடுகள் குறித்து பேசினார்.
சாலை விபத்துக்கான முக்கிய காரணங்கள், சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம், விதிமீறல்களால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் பாதுகாப்பான வாகன பயணம் குறித்து, சாலை பாதுகாப்பு பயிற்சியாளர் நரசிம்மமணி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சி வழங்கினார். இதில் அனைவரும் சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். உதவி கோட்டப் பொறியாளர் அசோக்குமார், சுரேஷ்குமார், உதவி பொறியாளர் சையது ஹாசிம் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன. வாகன போக்குவரத்து சர்வீஸ் சாலைகளில் திருப்பி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவியர் மிகவும் அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்படும். இதனால் அதே பகுதியில் பழைய நெடுஞ்சாலை புதர்மண்டி கிடந்தது. அதனை சரி செய்து மக்கள் பயன்படும் வகையில் சமூக ஆர்வலர்களால் புனரமைக்கப்பட்டது. இந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விழா தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா தலைமையில் நடந்தது. தி.மு.க. ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து பங்கேற்று ரிப்பன் வெட்டி, இந்த பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். வார்டு உறுப்பினர் முனியப்பன், விஜயநகர் காலனி, சுபாஷ் நகர் பொதுமக்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu