சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..!
குமாரபாளையத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். சாலை பாதுகாப்பு குறித்த விழுப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறும், மாணவ, மாணவியர் கோஷங்கள் போட்டவாறும், விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தவாறும் சென்றனர்.
கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணி, சேலம் சாலை, ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை உள்ளிட்ட பல பகுதிகள் வழியாக வந்து கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. பேராசிரியர்கள் ஞானதீபன், ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குமாரபாளையம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம், குமாரபாளையம் காவல் நிலையம், குமாரபாளையம் தாலுக்கா ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி மற்றும் தனியார் கல்லூரி ஆகியோர் இணைந்து , சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடந்தது.
விழிப்புணர்வு பேரணி ராஜம் தியேட்டர் பகுதியில் தொடங்கி ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு உள்ளிட்ட பிரதான சாலை வழியாக குமாரபாளையம் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இந்த பேரணியினை வட்டார போக்குவரத்து உதவி ஆய்வாளர் சிவகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வட்டார போக்குவரத்து அலுவலகம், குமாரபாளையம் காவல் நிலையம், குமாரபாளையம் தாலுக்கா ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி மற்றும் தனியார் கல்லூரி ஆகியோர் இணைந்து நடத்தினர். இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறையினர், ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும், துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு விநியோகம் செய்தவாறும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu