குமாரபாளையம்: சேலம் சாலையில் டிவைடர் அமைக்கும் பணி தீவிரம்

குமாரபாளையத்தில், சேலம் சாலையில் டிவைடர் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், சேலம் சாலையில் போலீஸ் ஸ்டேஷன் முதல், ராஜம் தியேட்டர் வரை விபத்துக்களை தடுக்கவும், வாகனங்களின் வேகத்தை கட்டுபடுத்தவும், டிவைடர் அமைக்கப்பட்டு வருகிறது.

ராஜம் தியேட்டரில் இருந்து சேலம் - கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு வரை, வடிகால், நடைமேடை பணிகள் நடைபெற்று வந்தது. இதனால், இப்பகுதியில் டிவைடர் அமைக்கும் பணி காலதாமதம் ஏற்பட்டது.

தற்போது, இந்த பகுதியில் வடிகால் உள்ளிட்ட பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளதால், டிவைடர் அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமின்றி வாகனங்களை ஒட்டி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!