குமாரபாளையம் அருகே சாலை மேம்பாட்டு பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

குமாரபாளையம் அருகே சாலை மேம்பாட்டு   பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
X

குமாரபாளையம் அருகே நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகளை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம்ஆய்வு செய்தார்.

Road Work Construction -குமாரபாளையம் அருகே நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.

Road Work Construction -குமாரபாளையம், பள்ளிபாளையம், ஜேடர்பாளையம், மங்களம், வேலூர் செல்லும் சாலையில் கவுண்டம்பாளையம் மற்றும் கோனேரிமேடு பகுதிகளில் அமைக்கப்பட்ட பாலம், மற்றும் சின்னியம்பாளையம், பிரிதி செல்லும் சாலையில் கருக்கம்பாளையம் பகுதியில் கிணற்றுக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு சுவர் ஆகிய பணிகளை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அப்போது மழைக்காலங்களில் சாலை பராமரிப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் சந்திரசேகர், உதவி கோட்ட பொறியாளர் தமிழரசி, உதவி பொறியாளர் சையது ராசிம் உள்பட பலர் பங்கேற்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai in future agriculture