தார் சாலையை சேதப்படுத்தும் பந்தல் அமைப்பாளர்கள் - நடவடிக்கை பாயுமா?

தார் சாலையை சேதப்படுத்தும் பந்தல் அமைப்பாளர்கள் - நடவடிக்கை பாயுமா?
X

மனசாட்சியோடு செயல்படலாமே: குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில், புதிய தார் சாலையை சேதப்படுத்தி பந்தல் அமைத்தனர்.

குமாரபாளையத்தில், புதிய தார் சாலையை பந்தல் அமைப்பாளர்கள் சேதப்படுத்தி வருவது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சாலை பள்ளங்களால் பல விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் உயிரிழப்பு, கை, கால் முறிவு உள்ளிட்ட பல துன்பங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். சேதமான சாலையை புதிய தார் சாலையாக மாற்ற, பொதுமக்கள் பல ஆண்டுகள் போராடி, பல போராட்டங்களை நடத்தி அதன் பின்னர், ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

ஆனால், இப்படி தங்கள் பகுதியில் அமைக்கப்படும் புத்தம் புதிய தார்சாலையை, ஒரு நாள் நிகழ்வுக்காக, பந்தல் அமைப்பாளர்கள் சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடுகின்றனர். எதை பற்றியும் சிந்திக்காமல், கடப்பாரை கொண்டு சாலையின் மையப்பகுதியில் பள்ளம் பறித்து பந்தல் அமைத்து வருவது சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

பந்தல் பிரிக்கப்படும் போது, அந்த பள்ளத்தை பந்தல் அமைப்பாளர்கள் சரியாக மூடுவதும் இல்லை. சரியாக மூடும்படி சொன்னால், பந்தல் போட்டவர்கள், அதை கண்டு கொள்வதில்லை. இந்த குழிகளால் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. எனவே, தார் சாலையை சேதப்படுத்தி வரும் பந்தல் அமைப்பாளர்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு உரிய அறிவுரை வழங்குவதோடு, குழி பறித்ததற்கான செலவின தொகையை பெறுவதுடன், அபராதமும் விதிக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
காசநோய், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு: ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்