/* */

குமாரபாளையத்தில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

குமாரபாளையத்தில் நடந்த தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் 42 பெண்கள் உள்ளிட்ட 117 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்
X

குமாரபாளையத்தில் தொழிற்சங்கத்தினர் சார்பில் கனரா வங்கி முன்பு மறியல் போராட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் நடந்த தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் 42 பெண்கள் உள்ளிட்ட 117 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் விசைத்தறி, விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், மத்திய அரசின் தொழிலாளர் நல சட்டங்களின் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை அமல்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஆதாய விலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது, குறைந்த பட்ச பென்சன் 9 ஆயிரமாக உயர்த்த வேண்டும், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்பை அதிகரித்து வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், வேலை பாதுகாப்பை உறுதி செய்யாத முதலாளிகளுக்கு, உதவும் சலுகைகள், நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும், அனைத்து அடிப்படை தொழிலாளர் சட்டங்கள் அமுலாக்கப்பட வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படுவதற்கு தேசிய சமூக பாதுக்காப்பு நிதியம் உருவாக்கப்பட வேண்டும், போனஸ் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றுக்கான தகுதி, மற்றும் ஊதிய வரம்புகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும், என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி, கனரா வங்கி முன்பு மறியல் போராட்டம் நடந்தது. சாலை மறியல் செய்ய முயன்ற போது, தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் 42 பெண்கள் உள்ளிட்ட 117 பேரை கைது செய்தனர். நிர்வாகிகள் பாலசுப்ரமணி, பாலுசாமி, சுப்பிரமணி, கோவிந்தராஜ், முருகேசன், ஆறுமுகம், சக்திவேல், வெங்கடேசன், சித்ரா, உள்பட பலர் பங்கேற்றனர்.

நேற்று நடந்த மறியல் போராட்டம் தொடர்பாக கடந்த பல நாட்களாக ஆலோசனை கூட்டம், தெருமுனை பிரச்சாரம், துண்டு பிரசுரம் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்த ஆலோசனை கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டத்தில்சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி, ஏ.ஐ.சி.சி.டி.யூ, எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட பல தொழிற்சங்கங்க நிர்வாகிகள் பாலுசாமி, ராமசாமி, வெங்கடேசன், பெரியசாமி, சித்ரா, சக்திவேல், மோகன், முருகன், அருள் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 16 Feb 2024 11:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க