குமாரபாளையம் அருகே டூ வீலர் மோதி நடந்து சென்றவர் பலி

குமாரபாளையம் அருகே டூ வீலர் மோதி நடந்து சென்றவர் பலி
X
குமாரபாளையம் அருகே டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.

குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் மாரிமுத்து, 65. கூலி. இவர், சம்பவத்தன்று காலை 09:50 மணியளவில், ஆனங்கூர் சாலை, மேட்டுக்கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அதே வழியில் வேகமாக வந்த டூவீலர், இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.

ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் மாரிமுத்துவின் உடல்நிலை மிக மோசமானதால், குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவகள், இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டூவீலர் ஓட்டி வந்த எலந்தகுட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி பழனிச்சாமி, 41, என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story
காசநோய், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு: ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்