குமாரபாளையம் அருகே டூவீலர் - கார் மோதல்: தாத்தா, பேரன் படுகாயம்

குமாரபாளையம் அருகே டூவீலர் - கார் மோதல்: தாத்தா, பேரன் படுகாயம்
X
குமாரபாளையம் அருகே டூவீலர், கார் மோதிய விபத்தில் தாத்தா, பேரன் படுகாயம் அடைந்தனர்.

பள்ளிபாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60, கூலித்தொழிலாளி. இவரது பேரன் அபிலேஷ், 11. இவர் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் இடைப்பாடியில் உள்ள சுப்பிரமணியின் மகள் வீட்டிற்கு செல்வதற்காக, டூவீலரில் சென்று விட்டு, ஊர் திரும்பிகொண்டு இருந்தனர்.

சேலம் கோவை புறவழிச்சாலை, கொல்லப்பட்டி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, பெங்களூரில் இருந்து வந்த சுகிலால், 36, வேகமாக ஓட்டி வந்த கார், இவர்களது டூவீலர் மீது மோதியது. இதில், டூவீலர் தூக்கி வீசப்பட்டதில் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது; இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில், இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். குமாரபாளையம் போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுனர் சுகிலாலை கைது செய்தனர்.

Tags

Next Story