டிவைடரை உடைத்து நின்ற லாரி- பள்ளிபாளையத்தில் பரபரப்பு

டிவைடரை உடைத்து நின்ற லாரி- பள்ளிபாளையத்தில் பரபரப்பு
X

விபத்துக்குள்ளான லாரி. 

பள்ளிபாளையத்தில், சாலையின் மையத்தடுப்பில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.

சேலம் மார்க்கத்தில் இருந்து, ஈரோடு நோக்கி வெப்படை வழியாக லாரி ஒன்று, தவிடு லோடு ஏற்றியவாறு நேற்று அதிகாலை 02:00 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுனர் கட்டுபாட்டை இழந்த லாரி, ஈ.காட்டூர் என்ற இடத்தில் சாலையில் வைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது மோதியதி.

இந்த விபத்தில், சாலைத் தடுப்பை உடைத்துக் கொண்டு மேலே ஏறி லாரி நின்றது. இதில் ஓட்டுனர் மயக்கமடைந்து சரிந்தார். அவரை மீட்டு, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வெப்படை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்