சாலையில் திடீர் பள்ளதால் விபத்து அபாயம்: சீரமைத்த பொதுநல ஆர்வலர்கள்

சாலையில் திடீர் பள்ளதால் விபத்து அபாயம்:   சீரமைத்த பொதுநல ஆர்வலர்கள்
X

குமாரபாளையத்தில் விபத்து அபாயம் ஏற்படும் வகையில் திடீரென்று ஏற்பட்ட சாலை பள்ளத்தை பொதுநல ஆர்வலர்கள் சீரமைத்தனர்.

குமாரபாளையத்தில் விபத்து அபாயம் ஏற்படும் வகையில் திடீரென்று ஏற்பட்ட சாலை பள்ளத்தை பொதுநல ஆர்வலர்கள் சீரமைத்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் இடைப்பாடி சாலை, காவேரி நகர், புதிய பாலம் பிரிவு பகுதியில் ஒரு கை உள்ளே நுழையும் அளவிற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. அந்த சாலை எவ்வளவு பரப்பளவு சேதமாகியுள்ளது? என்பது தெரியாமல் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்பகுதி தன்னார்வலர்கள் சிலர் அந்த பள்ளத்தை சீரமைத்தனர்.

இதனால் வாகன போக்குவரத்து இயல்பாக நடைபெற்றது. தாமாக முன்வந்து சாலை பள்ளத்தை சரி செய்த தன்னார்வலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags

Next Story