வீதி பெயர் பலகையால் விபத்து ஏற்படும் அபாயம்

வீதி பெயர் பலகையால் விபத்து ஏற்படும் அபாயம்
X

ஆபத்தான நிலையில் உள்ள பெயர் பலகை.

Today Accident News in Tamil - குமாரபாளையத்தில் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உடையார்பேட்டை செல்லும் வழியில் வீதி பெயர் பலகையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது

Today Accident News in Tamil - குமாரபாளையத்தில் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உடையார்பேட்டை செல்லும் வழியில் வீதி பெயர் பலகையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதுகுமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உடையார்பேட்டை செல்லும் வழியில் சில நாட்கள் முன்பு புதிய தார்சாலை போடபட்டது. அப்போது அங்கிருந்த வீதி பெயர்பலகை அகற்றப்பட்டது. சாலை பணி முடிந்து இந்த பெயர்பலகையை பதிக்காமல் சுவற்றில் சாய்த்து விட்டு சென்றனர். இது எந்நேரமும் கீழே சாய்ந்து விடும் நிலையில் உள்ளது. இவ்வழியாக செல்வோர் மீது விழுந்தால், படுகாயமடைந்து பெரும் அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்படும். விபத்து அபாயம் ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த போர்டை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட போர்டை மீண்டும் அதே இடத்தில் வைக்காமல் இருந்த ஒப்பந்ததாரர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story