நிலஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய வருவாய்த்துறையினர்

நிலஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய வருவாய்த்துறையினர்
X

குமாரபாளையம் கத்தேரிபிரிவில் நில ஆக்கிரமிப்பை வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

குமாரபாளையத்தில்அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற தனியார் அமைப்பினரை வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

குமாரபாளையம் சேலம்-கோவை புறவழிச்சாலை பகுதியில் ஏ.வி.எஸ். வே பிரிஜ் அருகே நீர் நிலை அரசு புறம்போக்கு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்தில் சிமெண்ட் அட்டையால் மேற்கூரை அமைக்க முற்பட்டனர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர் காமராஜ் குமாரபாளையம் போலீசார் மற்றும் தாசில்தார் தமிழரசிக்கு தகவல் கொடுத்தார். போலீசார் மற்றும் வி.ஏ.ஓ. தியாகராஜன் நேரில் வந்து அரசு இடத்தை யாரும் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என அறிவுறித்தினர். இதனால் ஆத்திரமடைந்த தனியார் அமைப்பினர் காமராஜை தாக்க முயற்சிக்க போலீசார் தடுத்தனர்.




Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!