வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு
சார்பில் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமாரபாளையம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தாசில்தார் சிவக்குமார் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தார். பழைய ஓய்வூதிய திட்டம் மீட்பு, சரண்டர் மீட்பு, கிராம உதவியாளர் உரிமை மீட்பு, கிராம நிர்வாக அலுவலர் பாதுகாப்பு, நில அளவர் பணிச்சுமை, நேரடி நியமனம், பதவி உயர்வு, வருவாய் நிர்வாக ஆணையரக, குடிமைப்பணி உள்ளிட்ட அலுவலர்களுக்கான 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கிராம நிர்வாக அலுவலக பணியாளர்கள் சங்கம், நில அளவைய்ர் சங்கம், தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், உள்ளிட்ட பல சங்கத்தினர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu